Earthquake In Ladakh: லடாக்கில் இன்று (ஜன.19, 2026) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
Earthquake In Ladakh: லடாக்கில் இன்று (ஜன.19, 2026) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது.

Published on: January 19, 2026 at 4:22 pm
புதுடெல்லி, ஜன.19, 2026: லடாக்கில் இன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிவநடுக்கத்தின் பாதிப்பை லே மக்கள் உணர்ந்தனர்.
காஷ்மீர் வடமேற்கு பகுதியில் திங்கட்கிழமை காலை 11:51 மணிக்கு, தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் மையம் லே-லடாக் பகுதியில், 171 கி.மீ ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த அதிர்வு, நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படும் ஹிமாலயப் பகுதியில் பதிவாகியுள்ளது.
தற்போது உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், பிந்தைய அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
அப்கானிஸ்தான் பகுதியில் கடந்த சில நாள்களில் பல நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஜனவரி 15 அன்று, 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 96 கி.மீ ஆழத்தில் பதிவாகியது.
அதற்கு முன், ஜனவரி 14 அன்று, 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 90 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தரவுகளின்படி, இந்த அதிர்வுகள் அந்தப் பகுதியில் நில அதிர்வு செயல்பாடு தொடர்ந்து நடைபெறுவதை காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திடீரென குலுங்கிய ஆப்கானிஸ்தான்.. பூமி அதிர்ச்சி- பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com