Kerala Assembly Election 2026: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Kerala Assembly Election 2026: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Published on: January 19, 2026 at 11:28 am
திருவனந்தபுரம் ஜனவரி 19, 2026; கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, ராஜேந்திரன் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மூன்று முறை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்; மேலும் இவர் அந்த மாவட்டத்தில் வலிமையான கம்யூனிஸ்ட் தலைவராகவும் அறியப்பட்டவர் ஆவார்.
இதையும் படிங்க; Sonam Wangchuk in jail; 114 நாட்கள் கடந்தும் சிறையில் சோனம் வாங்சுக்.. மனைவி கண்ணீர்!
அதாவது, ராஜேந்திரன், இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தொகுதியை CPI(M) உறுப்பினராக 2006, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் கட்சியின் மாவட்டக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
இந்த நிலையில், கேரளாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ராஜேந்திரன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவர், 2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை, திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
இதையும் படிங்க; ‘காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. மக்கள் நம்பிக்கை இழப்பு’.. பிரதமர் நரேந்திர மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com