India Open Badminton tournament 2026: இந்தியாவின் லக்ஷ்யா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி க்வார்டர்ஃபைனலுக்கு முன்னேறினார்.
India Open Badminton tournament 2026: இந்தியாவின் லக்ஷ்யா சென், ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி க்வார்டர்ஃபைனலுக்கு முன்னேறினார்.

Published on: January 16, 2026 at 12:34 pm
புதுடெல்லி, ஜன.16, 2026: இந்தியாவின் லக்ஷ்யா சென் தனது திறமையான ஆட்டத்தால் இந்தியா ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
⦁ லக்ஷ்யா சென் சிறப்பான ஆட்டத்துடன் வெற்றி பெற்றார்.
⦁ கெண்டா நிஷிமோட்டோ கடுமையாக போராடினாலும், சேனின் ஆட்டத்திற்கு முன் வீழ்ந்தார்.
⦁ இந்த வெற்றி, இந்தியாவின் பேட்மிண்டன் பயணத்தில் முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெறும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீரர் லக்ஷ்யா சேன் ஜப்பானின் நிஷிமோட்டோ கெண்டாவை நேரடி செட்களில் 21-19, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவு க்வார்டர்ஃபைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன், இந்திய வீரர்கள் ஹெச். எஸ். பிரணாய் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் இருவரும் ரவுண்ட் ஆஃப் 16-இல் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.
பிரணாய், சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் 21-18, 19-21, 14-21 என்ற கணக்கில் தோற்றார்; ஸ்ரீகாந்த், பிரான்ஸ் வீரர் கிரிஸ்டோ போபோவ்விடம் 14-21, 21-17, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் மல்விகா பன்சோட் சீனாவின் ஹான் யூவிடம் 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்டர்-19 உலகக் கோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com