ICC U19 WorldCup: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலக கோப்பை போட்டியில், இந்தியா அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ICC U19 WorldCup: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலக கோப்பை போட்டியில், இந்தியா அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Published on: January 16, 2026 at 10:52 am
புலாவாயோ சிட்டி, ஜன.16, 2026: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப் பெற்றது.
ஐ.சி.சி ஆண்கள் அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பை 2026 தொடக்கப் போட்டியில், இந்தியா அமெரிக்காவை டி.எல்.எஸ் முறையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வேயின் புலாவாயோ நகரில் உள்ள க்வீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 35.2 ஓவர்களில் வெறும் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவின் ஹெனில் படேல் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இலக்கை துரத்தும் போது, இந்தியா ஆரம்பத்திலேயே வைபவ் சூர்யவன்ஷியை இழந்தது.
பின்னர் மழை காரணமாக போட்டி 37 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டு, திருத்தப்பட்ட இலக்காக 96 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அதை இந்திய அணி ஆயுஷ் மஹாத்ரே தலைமையில் எளிதாக அடைந்து வெற்றியைப் பெற்றது. சிறப்பான பந்துவீச்சுக்காக ஹெனில் படேல் ஆட்ட நாயகன் விருதைப் வென்றார். இந்தியா தனது அடுத்த போட்டியை வங்கதேச அணிக்கு எதிராக நாளை (ஜன.17, 2026) அதே இடத்தில் ஆட உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பி.வி சிந்து.. இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com