Dhurandhar: ரன்பீர் கபூரின் துரந்தர் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படம் புஷ்பா-2 படத்தின் வசூலை முந்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dhurandhar: ரன்பீர் கபூரின் துரந்தர் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படம் புஷ்பா-2 படத்தின் வசூலை முந்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: January 7, 2026 at 5:48 pm
Updated on: January 7, 2026 at 5:49 pm
மும்பை, ஜன.7, 2026: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னேறி, புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன.6, 2025) இந்தப் படம் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2: த ரைஸ் படத்தின் ஹிந்தி வசூலை முந்தியது. இதன் மூலம், துரந்தர் ஹிந்தியில் எப்போதும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தப் படம் உள்ளூரில் ₹831 கோடி (net collection) வசூலித்துள்ளது. இந்த தரவுகள், பட தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஆகும். புஷ்பா-2 ஹிந்தி டப் செய்யப்பட்ட பதிப்பு மட்டும் ₹821 கோடி வசூல் செய்து இருந்தது. இந்நிலையில், இதுவரை ஹிந்தியில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.
எனினும், அதிகாரப்பூர்வ தயாரிப்பாளர் தரவுகள் மற்றும் வர்த்தக வட்டாரங்களின் கணக்குகள் இடையே முரண்பாடு உள்ளது. அந்த வகையில், துரந்தர் படம், புஷ்பா 2-ஐ முந்தியதா அல்லது இன்னும் முந்த வேண்டுமா என்பது, அடுத்த சில வாரங்களில் வசூல் நிலவரத்தால் தெளிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்.. வெளியானது புதிய அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com