ICC: “நாங்கள் கலந்துகொள்ளும் போட்டியை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்” என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.
ICC: “நாங்கள் கலந்துகொள்ளும் போட்டியை இந்தியாவுக்கு வெளியே நடத்துங்கள்” என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது.

Published on: January 7, 2026 at 1:33 pm
துபாய், ஜன.7, 2026: வங்க தேச கிரிக்கெட் அணியின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது. அதாவது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 2026 T20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கையை நிராகரித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டினாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என்று உறுதி செய்துள்ளது
முன்னதாக, வங்கதேசம் தனது குழு போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்தது. அப்போது, இந்தியாவில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மானை நீக்கியது, வங்கதேசத்தில் நடந்த இந்து சமூகத்தினரின் கொலைகள் தொடர்பான எதிர்ப்புகளுக்குப் பிறகு வங்கதேசத்திடம் இருந்து இந்தக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்து, இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையை போல் மகன்.. அர்ஜூன் தெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன்.. யோக்ராஜ் சிங்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com