Anbumani Ramadoss: தமிழகத்தில் வேளாண்துறை தொடர்ந்து இரண்டாம்
ஆண்டாக எதிர்மறை வளர்ச்சி; கொண்டாட்டம்
நடத்தும் மோசடி திமுக அரசின் பதில் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: தமிழகத்தில் வேளாண்துறை தொடர்ந்து இரண்டாம்
ஆண்டாக எதிர்மறை வளர்ச்சி; கொண்டாட்டம்
நடத்தும் மோசடி திமுக அரசின் பதில் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: December 18, 2025 at 7:38 pm
சென்னை டிசம்பர் 18, 2025: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வேளாண்துறையின் வளர்ச்சி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக எதிர்மறையாக (மைனஸ்) சென்று கொண்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வாழும் உழவர்களின் வருமானம் குறைந்து விட்டதை அம்பலப் படுத்தும் இந்த புள்ளிவிவரத்தை மறைத்து தமிழகம் செழித்து விட்டதாக மோசடி நாடகத்தையும், வீணான கொண்டாட்டங்களையும் நடத்தி, தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “அடுத்தடுத்து இரு ஆண்டுகளாக வேளாண்துறை வீழ்ச்சி அடைந்து வருவதால், 2024&25ஆம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 13 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று 2011&12ஆம் ஆண்டின் அளவான ரூ.50,310 கோடிக்கு சென்று விட்டது. வேளாண்துறையை 13 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் சென்றது தான் திமுக அரசின் அவலமான சாதனை ஆகும்” என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, “பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள திமுக அரசு, அதை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முயல்வதை மன்னிக்க முடியாது. மோசடிகளை அரங்கேற்றுவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசு, அந்த வழக்கத்தைக் கைவிட்டு, வேளாண்துறை வீழ்ச்சியை ஒப்புக்கொள்ள வேண்டும்; கடந்த கால பாவங்களைப் போக்க பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குப்பைக் கிடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது: அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.. டி.டி.வி. தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com