Maharani S4 trailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியின் அரசியல் டிராமாவான மகா ராணி சீசன் 4 ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Maharani S4 trailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியின் அரசியல் டிராமாவான மகா ராணி சீசன் 4 ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Published on: October 10, 2025 at 10:54 pm
ஹைதராபாத், அக்.10, 2025: மகா ராணி சீசன் 4ல், நடிகை ஹுமா குரேஷி மீண்டும் ராணி பாரதியாக நடிக்கிறார். இந்த நிலையில், அவரது அரசியல் நாடகத் தொடரான மகாராணியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீசன் 4 விரைவில் வெளியாகிறது.
இந்நிகழ்ச்சியின் டிரெய்லரை வியாழக்கிழமை (அக்.9, 2025) வெளியிட்ட தயாரிப்பாளர்கள், நவம்பர் 7 ஆம் தேதி சோனிலிவ்வில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிவித்தனர்.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 முதல் 11ஆம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
மகாராணி டிரெய்லர்
இதற்கிடையில், மகா ராணி சீரிஸ் டிரெய்லரில் ராணி பிரதமரை அவரது இல்லத்தில் சந்திப்பதில் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் ஹுமா ராணி பாரதியாக நடிக்கிறார், மேலும் பீகாரில் அமைக்கப்பட்டு, மாநில அரசியலை ஆராய்கிறார்.
முதல் 3 சீசன்கள்
முதல் சீசன் 2021 இல் SonyLIV இல் திரையிடப்பட்டது, இரண்டாவது சீசன் 2022 இல் வெளியிடப்பட்டது. மூன்றாவது சீசன் மார்ச் 7, 2024 அன்று SonyLIV இல் வெளியிடப்பட்டது. இதில் அமித் சியால், வினீத் குமார், பிரமோத் பதக், கனி குஸ்ருதி, அனுஜா சாத்தே, சுஷில் பாண்டே, திப்யேந்து பட்டாச்சார்யா மற்றும் சோஹம் ஷா ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தீவிர ரேஸிங் பயிற்சியில் அஜித் குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com