Actor Varinder Singh Ghuman passes away: நடிகர் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படத்தில் உடன் நடித்த வரீந்தர் சிங் குமான் தனது 42 வயதில் காலமானார்.
Actor Varinder Singh Ghuman passes away: நடிகர் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படத்தில் உடன் நடித்த வரீந்தர் சிங் குமான் தனது 42 வயதில் காலமானார்.
Published on: October 10, 2025 at 1:46 pm
அமிர்தசரஸ், அக்.10, 2025: பிரபல உடற்கட்டமைப்பாளரும் நடிகருமான வரீந்தர் சிங் குமான் தனது 42 வயதில் மாரடைப்பால் காலமானார். இந்தச் செய்தியை பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா உறுதிப்படுத்தியுள்ளார்.
ਪੰਜਾਬ ਦੇ ਮਸ਼ਹੂਰ ਬਾਡੀਬਿਲਡਰ ਤੇ ਅਦਾਕਾਰ ਵਰਿੰਦਰ ਸਿੰਘ ਘੁੰਮਣ ਜੀ ਦੇ ਅਚਾਨਕ ਦੇਹਾਂਤ ਦੀ ਖ਼ਬਰ ਸੁਣ ਕੇ ਦਿਲ ਬਹੁਤ ਦੁਖੀ ਹੈ।
— Sukhjinder Singh Randhawa (@Sukhjinder_INC) October 9, 2025
ਉਹਨਾਂ ਨੇ ਆਪਣੀ ਸਖ਼ਤ ਮਿਹਨਤ, ਅਨੁਸ਼ਾਸਨ ਤੇ ਕਾਬਲੀਅਤ ਨਾਲ ਪੰਜਾਬ ਦਾ ਨਾਮ ਦੁਨੀਆ ਭਰ ‘ਚ ਰੌਸ਼ਨ ਕੀਤਾ।
ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਉਹਨਾਂ ਦੀ ਆਤਮਾ ਨੂੰ ਚਰਣਾਂ ਵਿੱਚ ਨਿਵਾਸ ਬਖ਼ਸ਼ਣ ਤੇ ਪਰਿਵਾਰ ਨੂੰ ਇਹ ਦੁਖਦਾਇਕ ਭਾਣਾ… pic.twitter.com/ZVQHUNWVf6
டைகர் 3 (2023) திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடித்த வரீந்தர், அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பஞ்சாபின் பிரபல உடற்கட்டமைப்பாளரும் நடிகருமான வீரேந்தர் சிங் குமான் ஜியின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு என் இதயம் மிகவும் வருத்தமடைந்தேன்.
தனது கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் திறமையால், அவர் பஞ்சாபின் பெயரை உலகம் முழுவதும் ஒளிரச் செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “வாகேகுரு ஜி அவரது ஆன்மாவை அவரது காலடியில் நித்தியமாக தங்க வைக்கட்டும். இந்த துக்ககரமான இழப்பை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும்” என பஞ்சாபி மொழியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘ அவள் இல்லாமல் நான்.. சோபிதாவை கொண்டாடும் நாக சைதன்யா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com