Asia Cup 2025 India Vs Bangladesh Score : ஆசிய கோப்பையில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.
Asia Cup 2025 India Vs Bangladesh Score : ஆசிய கோப்பையில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.
Published on: September 24, 2025 at 10:19 pm
Updated on: September 25, 2025 at 1:03 am
துபாய், செப்.24, 2025: ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, லிட்டன் தாஸ் தலைமையிலான அணியை வீழ்த்தினால், இலங்கை நாக் அவுட் ஆகும்.
அணி வீரர்கள்
இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (சி), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி
வங்கதேசம்: சைஃப் ஹாசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமோன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி (சி & டபிள்யூ.கே), முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்
இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
அபிஷேக் சர்மா அதிகப்பட்சமாக 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
Classic Abhishek Sharma 💥
— Sony Sports Network (@SonySportsNetwk) September 21, 2025
Watch #INDvPAK LIVE NOW, on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/hORYGOrpgS
மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உடன் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்ப ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று ஆடி 29 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
இதில் 1 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் பேட்டிங் செய்தது.
41 ரன்னில் இந்தியா வெற்றி
இந்த நிலையில், வங்கதேவ அணியால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வங்க தேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் சைஃப் ஹாசன் அதிகப்பட்சமாக 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி அடங்கும்.
மற்ற வீரர்களை பொருத்தமட்டில் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். எனினும், பர்வேஷ் ஹூசைன் இமான் மட்டும் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
3 விக்கெட் வீழ்த்திய குல்தீப்
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஜாஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரபோர்த்தி ஆகியோர் தலா இரு விக்கெட்டும், அக்ஸர் பட்டேல் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஆட்ட நாயகன்
ஆட்ட நாயகனாக 75 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : புதிய வரலாறு படைத்த அபிஷேக் சர்மா.. என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com