ISRO Chief V Narayanan: “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன்.
ISRO Chief V Narayanan: “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன்.
Published on: September 19, 2025 at 1:49 pm
பெங்களூரு, செப்.19, 2025: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால போக்குகள் குறித்த தேசிய பட்டறை நடந்தது.
இதில், ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன் பங்குகொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர் ககன்யான் திட்டம் குறித்து பேசினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “ஹைட்ரஜன் மிகவும் சுத்தமான, பசுமையான எரிபொருள். இதைப் பல இடங்களில் பயன்படுத்தலாம்” என்றார்.
#WATCH | Bengaluru: On the national workshop on Hydrogen Fuel Technologies and Future Trends, ISRO Chief V Narayanan says, "Hydrogen is a very clean, green fuel… It can be used in multiple places…We are conceiving a rocket for taking man to the moon… The Gaganyaan program… pic.twitter.com/yxbbhaesES
— ANI (@ANI) September 19, 2025
தொடர்ந்து, ‘மனிதனை சந்திரனுக்கு அழைத்துச் செல்வதற்கான ராக்கெட்டை நாம் உருவாக்கி வருகிறோம்; ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார்.
இதையடுத்து, “இந்த டிசம்பரில், நாம் முதல் பணியாளர்கள் இல்லாத பணியை மேற்கொள்ளப் போகிறோம்; அதைத் தொடர்ந்து இரண்டு பணியாளர்கள் இல்லாத பயணங்கள் மற்றும் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெறும்” என்றார்.
மேலும் தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்ற அவர், இதற்கான பெருமை பிரதமர் மோடிக்கே சேர வேண்டும்” என்றார். தொடர்ந்து, “ஐ.எஸ்.ஆர்.ஓ. இந்தப் பணிகளுக்கான பல வழிகளில் உழைத்துவருகிறது” என்றார்.
இதையும் படிங்க : இந்தியாவில் தெரிந்த சிவப்பு நிலவு.. அடுத்த அரிய சந்திர கிரகணம் எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com