Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?
Rahul Dravid: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். இதற்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் இருக்கிறாரா?
Published on: August 30, 2025 at 7:59 pm
புதுடெல்லி, ஆக.30 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து ராகுல் டிராவிட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) விலகினார். ராகுல் டிராவிட்டின் இந்த விலகல், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
இதற்கிடையில் இந்த விலகலுக்கு பின்னணியில் சஞ்சு சாம்சன் காரணமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும், பகிரங்கமாக, டிராவிட்டோ அல்லது சாம்சனோ தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இருப்பதாகக் குறிப்பிடவில்லை.
ஐபிஎல் 2025 இன் வீடியோக்கள் அவர்களை சற்று தூரமாகக் காட்டியிருந்தாலும், தற்போதுவரை அது யூகமாகவே இருக்கிறது. இதற்கிடையில், டிராவிட்டின் திடீர் வெளியேற்றம் கேள்விகளை எழுப்புகிறது. அவர் ஒரு வருடம் மட்டுமே அந்தப் பணியில் இருந்தார், இதுவும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்கள் சிலர், ராகுல் டிராவிட் பதவி விலகலுக்கு சஞ்சு சாம்சன் விவகாரத்தை தொடர்புப் படுத்தி எழுதிவருகின்றனர். இதுவும் சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் பயணம்; மனம் திறந்த பும்ரா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com