Arrest of nuns in Chhattisgarh: “பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லித் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்” என எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Arrest of nuns in Chhattisgarh: “பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லித் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்” என எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on: July 31, 2025 at 2:35 pm
சென்னை, ஜூலை 31 2025: “சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகள் கைது கண்டனத்துக்குரியது” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகளும் ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அம் மாநில முதலமைச்சர் இந்தச் செயலை நியாயப்படுத்தி இருப்பது மதவெறுப்பு அரசியல் அந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு மிகைத்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த கன்னியாஸ்திரிகள் தொழுநோயாளிகளுக்கு மருத்துவச் சேவை வழங்கி வருபவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ள எம்.எச். ஜவாஹிருல்லா, “வட மாநிலங்களில் முழுவதும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் போன்றவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : முதல்வரை சந்தித்த பிரேமலதா.. நன்றி கூறிய மு.க ஸ்டாலின்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com