O Panneerselvam meets MK Stalin: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாக்கிங் சென்ற இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
O Panneerselvam meets MK Stalin: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாக்கிங் சென்ற இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: July 31, 2025 at 2:30 pm
சென்னை ஜூலை 31 2025: வாக்கிங் சென்ற இடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு பூங்காவில் காலை நடைபயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துக் கொண்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மு க ஸ்டாலின் இடம் என்ன பேசினார் ஓபிஎஸ்?
இருவரும் வாக்கிங் சென்ற இடத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் நலம் விசாரித்துள்ளார் ஓபிஎஸ். கடந்த வாரம் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தற்போது அவர் வழக்கமான அலுவல் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நடை பயிற்சி சென்ற இடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இணைவாரா ஓபிஎஸ்?
அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி வலுவாகி வரும் இந்த நிலையில் ஓபிஎஸ் அந்த கூட்டணியில் கழகம் ஏற்படுத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கடந்த காலங்களில் பேசிய ஓபிஎஸ் தற்போது அங்கு தமக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது போன்று விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரான ஓ பன்னீர்செல்வம் திமுக தலைமையிலான கூட்டணியில் இணையலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் ஓ பன்னீர்செல்வம் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கூட்டணி சேரலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க; முதல்வரை சந்தித்த பிரேமலதா.. நன்றி கூறிய மு.க ஸ்டாலின்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com