Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன.
Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன.
Published on: July 9, 2025 at 7:23 pm
ஆகமதாபாத், ஜூலை 9 2025: குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (புதன்கிழமை) இடிந்து விழுந்தது. இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாலம் இடிந்து விழுந்ததை மஹிசாகர் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் நரேந்திர மாலி பார்த்துள்ளார்.
அதாவது, பாலம் இடிந்த நிலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றுக்குள் விழுந்துள்ளன. இது குறித்து மீனவர் மாலி கூறுகையில், “வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. இதைப் பார்த்தவுடன், நாங்கள் எங்கள் படகுகளை வாகனங்களை நோக்கித் திருப்பி மக்களை மீட்கும் முயற்சிகளைத் தொடங்கினோம்” என்றார்.
சரிந்த விழுந்த லாரிகள்
மேலும், “இரண்டு லாரிகள், ஒரு கார், ஒரு பிக்-அப் வேன் மற்றும் சில பைக்குகள் ஆற்றில் விழுந்ததாக அவர் கூறினார். இந்த துயரத்தில் எட்டு பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, “வாகனங்களில் இருந்த பெரும்பாலான பயணிகளைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று திரு மாலி கூறினார்.
தற்போது, காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட எட்டு பேரில், ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் வைதிக் படியார் (45), நைடிக் படியார் (45), ஹஸ்முக் பர்மர் (32), ரமேஷ் படியார் (32), வகாசிங் ஜாதவ் (26), பிரவீன் ஜாதவ் (26) ஆகியோர் ஆவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
குஜராத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் ரூ.2 லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com