Actor Jai: நடிகர் ஜெய் போலீஸ் லாக்கப்பில் சிக்கி உள்ளார்; அப்போது தன்னை அறியாமல் தனது உடல் நடுங்கியது என தெரிவித்துள்ளார்.
Actor Jai: நடிகர் ஜெய் போலீஸ் லாக்கப்பில் சிக்கி உள்ளார்; அப்போது தன்னை அறியாமல் தனது உடல் நடுங்கியது என தெரிவித்துள்ளார்.
Published on: July 2, 2025 at 1:51 pm
சென்னை ஜூலை 2.2025; நடிகர் ஜெய் சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய்வுடன் யோகி பாபு கருடா ராம் ஸ்ரீமன் உட்பட பலரும் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் தொடர்பான சில ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகின.
அதில் நடிகர் ஜெய் போலீஸ் லாக்கப்பில் இருப்பது போன்ற புகைப்படங்களும் உள்ளன. இது பற்றி பேசிய நடிகர் ஜெய், ” போலீஸ் லாக்கப் காட்சிகளில் நடித்த போது நான் நிஜமாகவே சற்று அதிர்ந்தேன்; என் உடல் நடுங்கியது.
இந்தப் படத்தில் நடித்த போது எனக்கு ஏற்பட்ட பதற்றம், என் வாழ்நாளில் எனக்கு இதுவரை ஏற்பட்டது கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் போலீசாரிடம் அடி வாங்கும் காட்சிகளில் என்னை அறியாமல் எனது உடல் நடுங்கியது” என்றார்.
நடிகர் ஜெயின் சற்று மாறுது வானிலை திரைப்படம் அதிரடி காட்சிகள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இன்றைய சமூகத்தில் நடக்கும் முக்கியமான ஒரு பிரச்சனையைப் பற்றி படம் பேசும் எனவும் கூறப்படுகிறது.
இது பற்றி பேசிய நடிகர் ஜெய், ” பொதுவாக மனதை தாக்கும் கதைகளில் நடிக்க எனக்கு விருப்பம்; இந்தப் படமும் அப்படி நடித்தது தான்” என்றார்.
இதையும் படிங்க; சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. இந்தப் படத்துக்கு பின் இப்படி ஓர் ரகசியமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com