Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.
Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.
Published on: July 2, 2025 at 1:01 pm
புதுடெல்லி ஜூலை 2.2025: அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 1.2025) அறிமுகம் செய்தார். இந்த செயலியில் இந்திய ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும். அதாவது ரயில் பயணிகள் வெவ்வேறு வகையான செயலிகளை பயன்படுத்த தேவையில்லை.
முன்பதிவு டிக்கெட் முதல் முன்பதிவு இல்லாத டிக்கெட் வரை இந்த செயலியில் பெறலாம். மேலும் பிளாட்பார்ம் டிக்கெட், ரயில்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ், ரயில் உதவி சேவைகள், ரயிலில் உணவு ஆர்டர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
இந்த செயலில் முக்கியமான சிறப்பம்சத்தில் ஒன்று, சரக்கு தொடர்பான விசாரணை வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயணிகளுக்கு வசதியாக ஈ வாலெட் பயன்பாடும் உள்ளது.
கெஸ்ட் லாகின் வசதி
இந்த செயலியில் கெஸ்ட் லாகின் என்ற புதிய வசதி ஒன்று உள்ளது. அதாவது, ரயில் தொடர்பான விசாரணைகளை மட்டும் அறிய வேண்டும் என்றால் இந்த கெஸ்ட் லாகினை பயன்படுத்தலாம்.
அதாவது ஒருவரின் செல்போன் எண் அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த சேவையை அணுக முடியும்.
இதையும் படிங்க; உயிருக்கு எமனான ஏசி.. காருக்குள் தூங்கும் நபர்கள் உஷார்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com