Aamir Khan apologizes to Sivakarthikeyan: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கதை தெரியுமா?
Aamir Khan apologizes to Sivakarthikeyan: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கதை தெரியுமா?
Published on: July 2, 2025 at 12:29 pm
Updated on: July 2, 2025 at 12:35 pm
மும்பை ஜூலை 2 2025; பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனைப் பெருந்தன்மையுடன் அமீர் கானை வெளிப்படுத்தி உள்ளார்.
அமீர்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ள திரைப்படம் சித்தாரே ஜமீன் பார். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நம்ம ஊர் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஆம்.. இந்த படத்தின் கதை தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனிடமும், இந்தியில் பர்கான் அக்பர் இடமும் சொல்லப்பட்டுள்ளது. இருவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் படம் தொடர்பான கதை டிஸ்கஸ் போது, அமீர்கானுக்கு மிகவும் பிடித்துப் போக இது பற்றி அவர் இயக்குனரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் தான் படத்தில் அமீர்கான் நடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அமீர்கான் தான் திரைப்படங்களிலிருந்து ஒதுங்க வேண்டும் என நினைத்ததாகவும் இந்த கதை பிடித்து போனதால் அதில் நடித்ததாகவும் கூறினார். மேலும் சினிமாவில் இருந்து ஒதுங்கினாலும் சினிமா தயாரிப்பில் கவனம் செலுத்துவேன் என்ற அவர் இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கூறுகிறேன் என்றார்.
இதையும் படிங்க; ஆனந்தி கதாபாத்திரம் போல்.. மொக்க ஜோக் வனிதா குறித்து பேசிய நடிகை அஞ்சலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com