Devi Sri Prasad : எனது பாடலை ஹாலிஉட்டில் காப்பி அடிச்சுட்டாங்க என புகார் அளிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
Devi Sri Prasad : எனது பாடலை ஹாலிஉட்டில் காப்பி அடிச்சுட்டாங்க என புகார் அளிக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
Published on: July 2, 2025 at 11:57 am
ஹைதராபாத் ஜூலை 2.2025; “எனது பாடல் ஹாலிவுட் வரை சென்றது எனக்கு மகிழ்ச்சி தான்; ஆனால் பாடலை காப்பி அடித்து விட்டார்கள். இது வருத்தமாக உள்ளது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் முதல் இரண்டு பாகங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
வசூல் ரீதியாகவும் படம் ரூ.1,000 கோடிகளை தாண்டியது. இதில் படத்தின் முதல் பாகத்தில் உ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இந்த பாடலுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் உடன் குத்தாட்டம் போட்டு இருப்பார் நடிகை சமந்தா. இந்தப் பாடல் மட்டுமின்றி ஒட்டுமொத்த பாடல்களுக்கும் துள்ளலுடன் இசையமைத்திருப்பார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்த பாடல் தான் தற்போது ஹாலிவுட் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அதாவது பிரபல ஹாலிவுட் பாடகி அதியே டெனிஷன் என்பவர் தனது பாடலை காப்பி அடித்துள்ளார் என புகார் தெரிவிக்கிறார்.
மேலும் இதுகுறித்து ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் நான் யோசித்து வருகிறேன் என கூறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ” எனது பாடல் ஹாலிவூட் ஈர்த்தது எனக்கு பெருமை தான்” என்கிறார்.
இதையும் படிங்க; ஒரு செங்கலை கூட உருவ முடியாது.. சொன்னதை சாதித்த தனுஷ்.. குபேரா வசூல் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com