Urine eye wash: யூரின் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.
Urine eye wash: யூரின் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.
Published on: June 26, 2025 at 3:33 pm
Updated on: June 26, 2025 at 3:34 pm
புனே, ஜூன் 26 2025: இன்ஸ்டாகிராமில் பலரும் பல விதமான வீடியோக்கள் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகின்றன. இந்த நிலையில், மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சிறுநீர் மூலமாக கண்களை சுத்தம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் வீடியோவில் தோன்றும் அந்தப் பெண், தனது சிறுநீரை இரு குப்பிகளில் பிடித்து வைத்துக் கொண்டு தனது கண்களை சுத்மம் செய்கிறார். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதனை செய்த பெண்ணின் பெயர் நூபுர் பிட்டி ஆகும்.
Please don't put your urine inside your eyes. Urine is not sterile.
— TheLiverDoc (@theliverdr) June 25, 2025
Boomer aunties trying to be cool on Instagram is depressing…and terrifying.
Source: https://t.co/SQ5cmpSOfY pic.twitter.com/qgryL9YHfI
இதற்கிடையில் சில மருத்துவர்களும் பிட்டிக்கு மருத்துவ ஆலோசனை தேவை என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சமூக ஊடக தளங்களை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. அவ்வாறு நம்பும் பட்சத்தில் இதுபோன்ற பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சில மருத்துவர்கள், “மனித சிறுநீர் என்பது சுமார் 95% தண்ணீரால் ஆன ஒரு கழிவுப் பொருளாகும், மீதமுள்ளவை யூரியா, கிரியேட்டினின், அம்மோனியா, உப்புகள் மற்றும் உடல் வெளியேற்றும் பல்வேறு வளர்சிதை மாற்ற துணைப் பொருட்களால் ஆனவை” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், “இரத்த ஓட்டத்தில் இருந்து வடிகட்டப்பட்ட மருந்துகள், ஹார்மோன்கள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகளின் தடயங்களும் சிறுநீரில் இருக்கலாம். எனவே கண்ணின் சவ்வுகள் இதனால் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ள மருத்துவர்கள் சிறுநீர் போன்ற கழிவுப் பொருட்களை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 24 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; இமாச்சலப் பிரதேசத்தில் ஆசிரியர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com