Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கவாதிகள் மற்றும் 40 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கவாதிகள் மற்றும் 40 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: May 11, 2025 at 9:54 pm
புதுடெல்லி, மே 11 2025: பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் இதுவரை 100 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தரப்பில் 35-40 வீரர்களும் பலியாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவத்தால் பல போர் நிறுத்த மீறல்கள் நடந்ததை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் இதற்கு, இந்திய இராணுவம் “போதுமான மற்றும் பொருத்தமான முறையில்” பதிலளிக்கும் என்று அறிவித்தார். மேலும், ஊடுருவல்களைக் கண்டித்த மிஸ்ரி, பாகிஸ்தானை முழுமையாகப் பொறுப்பேற்று, “சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக ஆக்கிரமிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”
ஏர் மார்ஷல் பேட்டி
#WATCH | Delhi: #OperationSindoor | Air Marshal AK Bharti says, "…Have we achieved our objectives of decimating the terrorist camps, and the answer is a thumping Yes and the results are for the whole world to see…" pic.twitter.com/EH2MMjifpY
— ANI (@ANI) May 11, 2025
இந்த நிலையில் ஏர் மார்ஷல் பாரதி, “. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது நோக்கங்களை நாம் அடைந்துவிட்டோமா, அதற்கான பதில் ஆம் என்பதுதான், இதன் விளைவுகள் உலகம் முழுவதும் தெரியும்” என்றார்.
இந்தியா தரப்பில் 5 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் எனவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதம்.. அமைதி சாத்தியமில்லை; அசாதுதீன் ஓவைசி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com