Asaduddin Owaisi: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை தெரிவித்தார்.
Asaduddin Owaisi: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி சாத்தியமில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை தெரிவித்தார்.
Published on: May 11, 2025 at 1:51 pm
Updated on: May 11, 2025 at 1:52 pm
புதுடெல்லி, மே 11 2025: பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர அமைதிக்கு சாத்தியம் இல்லை என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து ஓவைசியிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “போர் நிறுத்தம் செய்தாலும் இல்லாவிட்டாலும், பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் பின்தொடர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓவைசி ட்வீட்
As long as Pakistan uses its territory for terrorism against India, there can be no permanent peace. #Ceasefire or no ceasefire we must pursue the terrorists responsible for #Pahalgam attack.
— Asaduddin Owaisi (@asadowaisi) May 10, 2025
I have always stood by the government & the armed forces against external aggression.…
மேலும், “ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும் பாராட்டத்தக்க திறமைக்கும் நான் நன்றி கூறுகிறேன். ராணுவ வீரர் எம். முரளி நாயக் மற்றும் ஏடிடிசி ராஜ் குமார் தாபா ஆகியோருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “மோதலின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அனைத்து பொதுமக்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” எனவும் ஓவைசி தெரிவித்துள்ளார். இதையடுத்து, “பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றும் வரை இரு நாடுகளுக்கு இடையே நிரந்தர அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது; இந்திய விமானப் படை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com