Vaiko: ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு வருக” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Vaiko: ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக் கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு வருக” என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Published on: May 9, 2025 at 12:05 pm
சென்னை, மே 9 2025: உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து தொடர்ந்து நடந்துவரும் சூழலில், ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அவர்கள் படும் சொல்லொணா துயரத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டாலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, அவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருமாறு எனக்கு தனிப்பட்ட அழைப்புகள், மின்னஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “போர் நடைபெறும் மண்டலத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவ தமிழக அரசும் தயாராக உள்ளது. எனவே, ஸ்ரீநகரில் உள்ள மாணவர் விடுதிகளில் இருந்து அம்மாணவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்புடன் விரைவில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com