Vaiko: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Vaiko: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்ததில் அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published on: May 6, 2025 at 3:30 pm
சென்னை மே 6 2025: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். வைகோ தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மருத்துவ தகவல்கள் கூறுகின்றன.
தொண்டர்கள் அதிர்ச்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகோ பூரண குண நலன் அடைய வேண்டும் என அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர். வைகோ அவ்வப்போது உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் தவறி விழுந்துள்ளார் என கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து முதல் கட்டமாக வெளியான தகவலில் வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததில், அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸோடு எந்தப் பிரஸ்ஸரில் கூட்டணி வைத்தீர்கள்? மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!
கடந்த ஆண்டு மே மாதம்..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஆண்டு (2024) மே மாதமும், வீட்டில் தவறி விழுந்தார். அப்போது அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் பூரண உடல் நலம் பெற்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவர் மீண்டும் கீழே விழுந்துள்ளது, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கட்சிப் பிரச்சனை..
வைகோவின் மதிமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்கட்சி பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது. வைகோவின் மகன் துரை வைகோ MP கட்சியின் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர் மல்லை சத்தியா உடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அவர் கட்சி பொறுப்பை விட்டு விலகினார். தொடர்ந்து, இருவரையும் சமாதான படுத்திய வைகோ, தனது மகன் துரை வைகோவை மீண்டும் கட்சிப் பொறுப்பை ஏற்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயை விமர்சித்த திருமாவளவன்; ஏ.சி அரசியல்வாதி என்கிறார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com