Thudaram Tamil remake: நடிகர் மோகன்லால் நடிகை ஷோபனா, காம்பினேஷனில் வெளியாகி கேரளத்தில் வசூலில் சக்கை போடு போடும் துடாரம் திரைப்படம் 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
Thudaram Tamil remake: நடிகர் மோகன்லால் நடிகை ஷோபனா, காம்பினேஷனில் வெளியாகி கேரளத்தில் வசூலில் சக்கை போடு போடும் துடாரம் திரைப்படம் 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
Published on: May 4, 2025 at 5:26 pm
சென்னை மே 4 2025: மலையாள திரை உலகில் மோகன்லால் ஷோபனா ஜோடிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. இந்த நிலையில் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் துடாரம்.
இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாரன் டைரக்ஷனில் நடிகர் மோகன் லால் நடித்திருந்த எம்புரான், திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த எம்புரான் திரைப்படம்.
இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன் லாலின் துடாரம் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படமும் வசூலை வாரி குவித்து வருகிறது. திரைப்படத்தைப் பொருத்தவரை எம்புரான் மற்றும் துடாரம் வெவ்வேறு கதை அம்சத்தை கொண்டவை ஆகும்.
இந்த நிலையில், துடாரம் திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் 2025 மே மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழில் இத் திரைப்படத்திற்கு தொடரும் என தலைப்பிட்டுள்ளனர். மலையாளத்தை போல் தமிழிலும் இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என தயாரிப்பாளர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நான் யாரையும் விமர்சிக்கவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்.. பாகிஸ்தான் நடிகை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com