Robo Shankar: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்கும் அம்பி திரைப்படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Robo Shankar: பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்கும் அம்பி திரைப்படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Published on: May 4, 2025 at 3:33 pm
சென்னை மே 4 2025: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கதாநாயகனாக அம்பி என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார். தமிழ் சினிமாவை பொருத்தமட்டில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொடங்கி கதாநாயகர்களாக உயர்ந்த பட்டியலில் நடிகர் சந்தானம் முதலிடத்தில் உள்ளார்.
அவருக்குப் பின் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி தற்போது கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விடுதலை திரைப்படம் மிகவும் கவனம் பெற்றது. விடுதலைப் பாகம் இரண்டும் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.
இதற்கிடையில், காமெடியில் கலக்கி வரும் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் மண்டேலா. இந்தப் படத்தில் கதைகளும் மிகவும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கால அரசியலை நம் கண் முன்னே கொண்டு வரும். படத்தில் யோகி பாபுவின் நடிப்பு கைத்தட்டல். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் 2025 16ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கரின் அம்பி திரைப்படம் 2025 மே ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பாஸர் ஜே எல்வின் எழுதி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில், முரளிதரன் என்பவர் இசையமைப்பு பணிகளை கவனித்துள்ளார். பாடல்களை நான் ராசா எழுதியுள்ளார்.
படத்தில் இமாம் அண்ணாச்சி, மீசை ராஜேந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்துக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமான ரோபோ சங்கரும் உயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 42 வயதில் கவர்ச்சி நடனம் ஆட தயாரான ஸ்ரேயா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com