Chennai Meteorological Department: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ( மே 4 2025) தொடங்கும் நிலையில் 9 மாவட்டங்கள் கனமழை பெறும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
Chennai Meteorological Department: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ( மே 4 2025) தொடங்கும் நிலையில் 9 மாவட்டங்கள் கனமழை பெறும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
Published on: May 4, 2025 at 2:38 pm
சென்னை மே 4 2025; தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, ” காஞ்சிபுரம், கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், மற்றும் நீலகிரி என ஒன்பது மாவட்டங்களில் இன்று ( மே 4 2025) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் நீலகிரி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் திங்கள் கிழமை (மே 5 2025) மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் ( மே 6 2025) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடக்கம்
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் 2025 மே மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இந்த அதிகப்படியான வெயில் 2025 மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம்
அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் அதிகப்படியாக இருக்கும் இடங்களில் மக்கள் காலை 10 மணிக்கு மேலும் மதியம் 4 மணிக்குள்ளும் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த காலகட்டங்களில் அதிகப்படியான வெயில் இருக்கும் என்பதால் மருத்துவர்கள் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை, கன்னியாகுமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா? ராமதாஸ் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com