Case registered against actor Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவாரகொண்டா சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார். அவர் மீது ஹைதராபாத் எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Case registered against actor Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவாரகொண்டா சட்ட சிக்கலை எதிர்கொள்கிறார். அவர் மீது ஹைதராபாத் எஸ்.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Published on: May 2, 2025 at 8:04 pm
ஹைதராபாத், மே 2 2025: பிரபல நடிகர் விஜய் தேவராகொண்டா மீது தெலங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதாராபாத்தில் உள்ள எஸ்.ஆர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடி அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கை லால் சௌகான் என்ற வழக்கறிஞர் அளித்துள்ளார் என தெலங்கானா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இவர், ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். இந்த வழக்கு குறித்து பேசுகையில், “விஜய் தேவாரகொணடா அடிப்படை அறிவில்லாமல் பேசியுள்ளார். அவர் மீது எஸ்.டி மற்றும் எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விஜய் தேவாரகொண்டா என்ன பேசினார்?
ரெட்ரோ பட வெளியீட்டு விழாவில் விஜய் தேவாரகொண்டா, ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் குறித்து உணர்ச்சி மிகுதியில் பேசினார். அப்போது, பழங்குடியினர் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. அந்த நிகழ்ச்சியில், பயங்கரவாதிகளுக்கு கல்வி அறிவு தேவை என்பதை விஜய் தேவாரகொண்டா வலியுறுத்தினார்.
மேலும், தாம் டைம் டிராவல் செய்து பழங்காலத்துக்கு சென்றால், ஆங்கிலேயருக்கு இரு அறையும், ஒளரங்கசீப்புக்கு 3 அறையும் விடுவேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சூரி vs சந்தானம் vs யோகி பாபு: ரேஸில் முந்தப்போவது யார்? பரபரக்கும் கோடம்பாக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com