India, France Rafale-M jets deal: இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் நேற்று (ஏப்.28 2025) கையெழுத்திட்டன.
India, France Rafale-M jets deal: இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் நேற்று (ஏப்.28 2025) கையெழுத்திட்டன.
Published on: April 29, 2025 at 11:14 am
புதுடெல்லி, ஏப்.29 2025: இந்தியா- பிரான்ஸ் இடையே, இந்தியக் கடற்படைக்காக ரூ. 63,000 கோடி மதிப்புள்ள 26 ரபேல்-எம் (Rafale-M)போர் விமானங்களை வாங்கும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை (ஏப்ரல் 28, 2025) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதோடு, பிரான்ஸுடன் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ரபேல்-எம் விமானங்கள், உலகின் முன்னணி கடற்படை போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
இந்த ஒப்பந்தம் 22 ஒற்றை இருக்கை ஜெட் விமானங்கள் மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களை கொண்டுள்ளது. இதன் விநியோகம் 2031 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படையிடம் மட்டுமே இந்த ஜெட் விமானம் உள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த விமானங்கள் இந்திய கடற்படையின் கடல்சார் சக்தியை அதிகரித்து, இந்தியப் பெருங்கடலில் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவும். மேலும் முந்தைய MiG-29K விமானங்களை இவை மாற்றும்.
இதன் மூலம் விமானங்களுக்கு ‘படி-படி’ (Buddy-Buddy) எரிபொருள் நிரப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன்மூலம் ஒரு விமானம் மற்றொரு விமானத்திற்கு பறக்கும் நிலையிலேயே எரிபொருள் நிரப்ப முடியும்.
தற்போது, இந்திய விமானப்படை 36 ரஃபேல் ‘C’ வகை விமானங்களை வடக்கு இந்தியாவிலுள்ள இரு விமானத் தளங்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘வளர்ச்சி காணும் காஷ்மீர்; அழிக்க துடிக்கும் பயங்கரவாதிகள்’.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com