Actor Akshay Kumar: பயங்கரவாதிகளுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.. என மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
Actor Akshay Kumar: பயங்கரவாதிகளுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.. என மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
Published on: April 26, 2025 at 10:43 pm
மும்பை, ஏப்ரல் 26 2025: அக்ஷய் குமார் நடிப்பில் கேசரி 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை, அதன் பின்னணி குறித்து சொல்லப்படாத பக்கங்களை இந்தப் படம் விவரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் வெற்றி விழா மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (ஏப்ரல் 26 2025) நடைபெற்றது. இந்தப் பட விழாவில் பேசிய நடிகர் அக்ஷய் குமார், ” மீண்டும் நாம் கோபமான ஒரு நிகழ்வை சந்தித்துள்ளோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” துரதிஷ்டவசமாக நம் இதயங்களில் மீண்டும் கோபக்கனல் எழுந்துள்ளது; நான் என்ன பேசுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இன்றும் அந்த பயங்கரவாதிகளுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்; அது என்ன என்பதையும் நான் இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறேன்” என்றார். அப்போது அவருடன் நடிகர் மாதவன் உடன் இருந்தார். கேசரி 2 படத்தில் நடிகர் மாதவன் இரண்டாம் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதைக் குறிப்பிட்டு நடிகர் அக்ஷய் குமார் இவ்வாறு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேமராவுக்கு பின்னால் நடிகர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள்.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com