ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் யார் யார்? முழு விவரம்!

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேர் யார்? முழு பட்டியல் இங்குள்ளது.

Published on: April 23, 2025 at 7:11 pm

ஜம்மு, ஏப்.23 2025: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.23 2025) 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விடுமுறைக்காகக் கூடியிருந்த பஹல்காமின் புல்வெளிகளில் கூடியிருந்த போது, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதிப்படுத்தினார்.

26 வயது கடற்படை அதிகாரி

இந்தத் தாக்குதலில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை லெப்டினன்ட் கொல்லப்பட்டார். இவர், கடந்த 6 தினங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். மேலும், இந்தச் சம்பவத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவர், கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர், பஹல்காமைச் சேர்ந்த ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் முழு விவரம்

  1. சுஷில் நத்யால், இந்தூர்
  2. சையத் அடில் ஹுசைன் ஷா, பஹல்காம்
  3. ஹேமந்த் சுஹாஸ் ஜோஷி, மும்பை
  4. வினய் நர்வால், ஹரியானா
  5. அதுல் ஸ்ரீகாந்த் மோனி, மகாராஷ்டிரா
  6. நீரஜ் உதவானி, உத்தரகாண்ட்
  7. பிடன் அதிகாரி, கொல்கத்தா
  8. சுதீப் நியூபனே, நேபாளம்
  9. சுபம் திவேதி, கான்பூர்
  10. பிரசாந்த் குமார் சத்பதி, மலஷ்வர் ஒடேசா
  11. மணீஷ் ரஞ்சன், பீகார்
  12. என் ராமச்சந்திரா, கேரளா
  13. சஞ்சய் லக்ஷ்மன் லாலி, தானே
  14. தினேஷ் அகர்வால், சண்டிகர்
  15. சமீர் குஹார், கொல்கத்தா
  16. திலீப் தசாலி, மும்பை
  17. ஜே சச்சந்திர மொழி, விசாகப்பட்டினம்
  18. மதுசூதன் சோமிசெட்டி, பெங்களூரு
  19. சந்தோஷ் ஜக்தா, புனே
  20. மஞ்சு நாத் ராவ், கர்நாடகா
  21. கஸ்துபா கன்வோடே, புனே
  22. பாரத் பூஷன், பெங்களூரு
  23. சுமித் பர்மர், குஜராத்
  24. யதேஷ் பர்மர், குஜராத்
  25. தாகேஹாலிங், அருணாச்சல பிரதேசம்
  26. ஷைலேஷ்பாய் எச் ஹிம்மத்பாய் கலாத்தியா, குஜராத்

இதையும் படிங்க : பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒற்றுமை நடவடிக்கை: ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com