Highest temperature in India: இந்தியாவில் நாக்பூரில் வெப்பம் அதிகமாக உள்ளது. மேலும், டெல்லியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்படுகிறது. ராஜஸ்தானில் வெப்ப அலை வீசுகிறது.
Highest temperature in India: இந்தியாவில் நாக்பூரில் வெப்பம் அதிகமாக உள்ளது. மேலும், டெல்லியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்படுகிறது. ராஜஸ்தானில் வெப்ப அலை வீசுகிறது.
Published on: April 20, 2025 at 9:54 am
புதுடெல்லி, ஏப்.20 2025: இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்ந்து வெப்ப அலைகள் வீசி வருகின்றன, அடுத்த சில நாட்களுக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பா பிராந்தியத்தின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20 2025) டெல்லியில் மேகமூட்டமான வானம் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில், மேற்கத்திய அலைகள் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாக்பூரில் வெப்பம் அதிகரிப்பு
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் சனிக்கிழமை (ஏப்.19 2025) நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை 44.7 டிகிரி செல்சியஸ் பதிவானதாக பிரபல ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரளவு மேகமூட்டமான வானம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 38 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம்
மேலும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பகுதிகளில் வெப்பமான இரவு நேர நிலைமைகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வானிலை செய்திகளில் “அடுத்த 2-3 நாட்களில் உத்தரப்பிரதேசம் தவிர வடமேற்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3°C குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஏப்ரல் 19 முதல் 21ம் தேதி வரை வறண்ட வானிலை நிகழும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: குலுங்கிய ஜம்மு காஷ்மீர்.. பதற்றத்தில் ஓடிய மக்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com