Arvind Kejriwal danced to the song Pushpa2: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா 2 பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
Arvind Kejriwal danced to the song Pushpa2: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா 2 பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
Published on: April 19, 2025 at 2:37 pm
புதுடெல்லி, ஏப்.19 2025: டெல்லியில் நடைபெற்ற தங்கள் மகளின் நிச்சயதார்த்த விழாவின் போது, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் பிரபலமான ‘புஷ்பா 2: தி ரூல்’ பாடலான ‘அங்காரோ கா அம்பர் சா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளின் நிச்சயதார்த்த விழா வியாழக்கிழமை (ஏப்.17 2025) இரவு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் ஒரு தனியார் நிகழ்வில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் புஷ்பா2 பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது மகளின் திருமண விழாவில் மனைவியுடன் புஷ்பா 2 பாடலுக்கு நடனம் ஆடினார். கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா-சம்பவ் திருமணம் ஏப்.18ஆம் தேதி நடந்துள்ளது.
— Dravidan Times (@DravidanTimes) April 19, 2025
#ArvindKejriwal #delhi #pushpa2 pic.twitter.com/iEfVAnARsY
இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ பகிர்ந்துள்ளது. அதில், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனம் ஆடும் பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் நடனம் ஆடுகிறார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் திருமணம் ஏப்.18ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவும் சம்பவ்வும் ஐஐடி டெல்லியில் வேதியியல் பொறியியல் படித்த காலத்தில் சந்தித்தனர். சம்பவ் தற்போது தனியார் துறையில் திட்ட மேலாண்மை ஆலோசகராக பணிபுரிகிறார்.
இதையும் படிங்க மேற்கு வங்கத்தில் வன்முறை அதிகரிப்பு: கவர்னர் பரபரப்பு பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com