Governor Ananda Bose: மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என அம்மாநில கவர்னர் சி.வி ஆனந்த போஸ் தெரிவித்தார்.
Governor Ananda Bose: மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என அம்மாநில கவர்னர் சி.வி ஆனந்த போஸ் தெரிவித்தார்.
Published on: April 18, 2025 at 1:45 pm
கொல்கத்தா, ஏப்.18 2025: மேற்கு வங்க கவர்னர் சி.வி ஆனந்த போஸ் ஏ.என்.ஐக்கு இன்று (ஏப்.18 2025) அளித்த பேட்டியில், “மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன” என்றார். இது குறித்து பேசிய அவர், “வங்காளத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை தலைதூக்கி வருகிறது. இந்த வன்முறையை அடக்கி, சவப்பெட்டியில் புதைத்து கடைசி ஆணி அடிக்க வேண்டும்” என்றார்.
#WATCH | "…Violence is showing its ugly head on and off in Bengal in various places. We have to coffin the cult of violence and drive the last nail in the coffin. That is a task which is necessary to maintain peace and tranquillity in Bengal…" says West Bengal Governor CV… pic.twitter.com/rS36TNjTEA
— ANI (@ANI) April 18, 2025
மேற்கு வங்க ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சந்திக்கச் செல்லும் வழியில் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, “அங்கு நடந்தது ஒருபோதும் நடக்கக்கூடாத ஒன்று. வங்காளத்தின் பல இடங்களில் உள்ள தெருக்களில் இந்த மரண நடனம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வகையான வன்முறையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இதை ஒடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்றார்.
மேலும், “களத்தைப் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் உணர்வுகளை கேட்டு அறிந்துக் கொள்ள உள்ளேன். வன்முறைக்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை நான் வைத்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்; ‘நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்’.. மோடியை தாக்கிய மம்தா பானர்ஜி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com