Jios 98 days plan: ரிலையன்ஸ் ஜியோவின் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 98 நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது என்ன திட்டம்? அதன் விலை என்ன?
Jios 98 days plan: ரிலையன்ஸ் ஜியோவின் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 98 நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது என்ன திட்டம்? அதன் விலை என்ன?
Published on: March 12, 2025 at 2:09 pm
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நீண்ட நாள் செல்லுபடியாகும் மற்றும் அதிக டேட்டாக்களை வழங்கும் மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் பிரிபெய்டு திட்டங்களை வழங்குகின்றன.
ஏர்டெல் 84 நாள் திட்டம்
பாரதி ஏர்டெல்லின் ரூ. 979 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Airtel Xstream Play Premium)கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் 22க்கும் மேற்பட்ட ஓ டி டி சேவைகளின் உள்ளடக்கத்தை பெறலாம்.
ஜியோவின் 98 நாள் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக பெறலாம். மேலும், தகுதியான பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்குகிறது. மேலும் பயனர்கள் ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி சர்வீசையும் பெறலாம்.
100 நாள் செல்லுபடியாகும் திட்டத்தை விரும்புபவர்கள் ஜியோவின் திட்டத்தை பயன்படுத்தலாம். அதே விலையில் ரூபாய் 20 குறைவாக செலவழித்து ஏர்டெல்லின் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை பெறலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் பயணங்கள் தங்கள் தேவையைப் பொறுத்து சேவைகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. சொல்லி அடித்த bsnl.. ஷாக் ஆன ஜியோ, ஏர்டெல்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com