Security Threat on Air India Flight: மும்பை டூ அமெரிக்கா சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
Security Threat on Air India Flight: மும்பை டூ அமெரிக்கா சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
Published on: March 10, 2025 at 4:46 pm
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்குச் சென்ற AI119 ஏர் இந்தியா விமானத்தில் இன்று (திங்கட் கிழழை) வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் கழிவறையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை குறிக்கும் குறிப்பு இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் இன்று காலை 10.25 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியம் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
பாதுகாப்பு அச்சுறுத்தலை உறுதிப்படுத்திய மும்பை காவல் அதிகாரி, “இது கழிப்பறையில் காணப்படும் வழக்கமான அச்சுறுத்தல் குறிப்பு போன்றது. அதனுடன், நிலையான நடைமுறையின்படி மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், அஜர்பைஜான் வழியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. தற்போது, மார்ச் 11 (செவ்வாய் கிழமை) காலை 5 மணிக்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிடம், உணவு மற்றும் பிற தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க அனைத்துவித நடவடிக்கைகளும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கப்படுப்பதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க காவல் சீருடையில் எஸ்.ஐ தற்கொலை.. தீயாய் பரவும்.. அதிர்ச்சி சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com