Ayan movie: நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் அயன். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?
Ayan movie: நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் அயன். இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?
Published on: March 7, 2025 at 7:59 pm
கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூரியாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் அயன். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மிகப்பெரிய புகழை அடைந்திருப்பார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படத்தின் பாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை சம்பந்தப்பட்ட ஹீரோவே வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜீவா, ” கேவி ஆனந்த் சார் எனக்கு கால் செய்தார். அப்போது கற்றது தமிழ் படத்தை பார்த்துவிட்டு, என்னிடம் ஸ்கிரிப்ட் ஒன்று உள்ளது அதை நாம் செய்யலாமா என கேட்டார். அயன் படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டியது; ஆனால் கைகூடவில்லை. கற்றது தமிழ் கொடுத்த தோல்வி காரணமாக, நான் கேவி ஆனந்த் சாரின் கோ படத்தில் நடித்தேன்” என்றார்.
அயன் படம் 2009 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, பிரபு மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த காலகட்டங்களில் இப்படம் ரூபாய் 80 கோடி வரை வசூலித்து இருந்தது. இந்த படத்தை தற்போது சன் நெக்ஸ்ட் மற்றும் எம் எக்ஸ் பிளேயரில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் குமாரின் அடுத்த படம்.. யார் அந்த இயக்குனர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com