தேங்காய் தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

தேங்காய் நீர் உடலுக்கு அத்தியாவசியமான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இதில் முதலாவது நீரேற்றம் ஆகும்.

 தேங்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்து பலன்கள் உங்களுக்கு தெரியுமா?

 தேங்காய் நீரில் ஏராளமான கனிம ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உடலுக்கு தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் நிரம்ப உள்ளன.

 தேங்காய் நீரில் இயற்கையான  ஆக்சிஜனேற்றம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.

 தேங்காய் நீரில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாக உள்ளது; கொலஸ்ட்ரால் பாதிப்பும் இல்லை

 தேங்காய் தண்ணீர் தினமும் குடிப்பதால் முகப்பரு நீங்கும் என கூறப்படுகிறது.

 தேங்காய் தண்ணீர் குடிப்பதனால் சிறுநீரக கற்கள் உருவாகுவது தடுக்கப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.

 நமக்கு மிக எளிதாக கிடைக்கும் தேங்காய் தண்ணீரில் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.